HomePoliticsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துக் கணிப்பு ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துக் கணிப்பு ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தனது கருத்து கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்பதை, இந்த கருத்து கணிப்பின் முடிவுகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே அவர் தீர்மானிப்பார் என தெரிகிறது.

கருத்து கணிப்புகளுக்காக புலனாய்வு துறை அதிகாரிகள் குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கணிப்புகள் மாவட்ட அளவிலும் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அனைத்து வேட்பாளர்களும் மக்களின் கருத்தை அறிய பலமான கருத்துக் கணிப்புகளை ஆரம்பித்துள்ளனர். இதேபோல, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எதிர்வரும் தேர்தலுக்காக கருத்து கணிப்புகளை நடத்தி வருகின்றன.

VIDEO

Related News