இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் எட்டு சுற்றின் தீர்க்கமான போட்டியொன்று இன்று (24) தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றது. காயில் மியர்ஸ் 35 ஓட்டங்களும், ரோஸ்டன் சேஸ் 42 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனையடுத்து டக்வொர்த் மற்றும் லூயிஸ் முறைப்படி தென்னாப்பிரிக்காவின் இலக்கு 17 ஓவர்களில் 123 ஓட்டங்களாக மாற்றப்பட்டது.
அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும், 17வது ஓவரின் முதல் பந்தில் மார்கோ ஜான்சனின் 6 ஓட்டங்களுடன் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, மற்றும் மேற்கிந்திய தீவுகள் போட்டியிலிருந்து வெளியேறியது.