HomeheadlineBreakingதாயின் சித்திரவதை: யாழ் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த வட இந்திய சிறுவன்

தாயின் சித்திரவதை: யாழ் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த வட இந்திய சிறுவன்

யாழ்ப்பாணத்தில் வட இந்தியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாய் சித்திரவதை செய்வதாக தெரிவித்து யாழ் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன், காவல்நிலையத்தில் தஞ்சமடைந்ததை தொடர்ந்து மீண்டும் அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் தெரிவித்ததாவது, குறித்த சிறுவன் வட இந்தியாவை சேர்ந்தவனாகும். அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலைசெய்வதும், இலங்கையை சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

சிறுவன், மன்னாருக்கு சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தபோதிலும், தவறுதலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வந்த சிறுவன் எங்கே செல்வது என தெரியாததால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதற்கிடையில், சிறுவனின் தாயை காவல்துறையினர் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். தாயார், சிறுவன் செய்யும் தவறுகளுக்காக தண்டிப்பதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து, சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த காவல்துறையினர், சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

VIDEO

Related News