HomeSri LankaJaffnaகாய்ச்சலுக்கு மருந்து எடுத்த பெண் யாழில் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு மருந்து எடுத்த பெண் யாழில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துவிட்டு உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று, மருந்து பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

மருந்தை உட்கொண்ட பின்னர், 23ஆம் திகதியான நேற்று உடல்நிலை மிக மோசமாகி, மூச்சு விட சிரமப்பட்டதால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

VIDEO

Related News