HomeSri Lankaஅந்தரங்கக் காட்சிகளால் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய மனைவி கைது

அந்தரங்கக் காட்சிகளால் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய மனைவி கைது

தனது கணவருடன் அந்தரங்கமாக இருந்த பெண்ணிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அந்தரங்கமாக இருந்த காட்சிகளின் காணொளிகளை இணையத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரியதாக கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்தக் குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும், அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், பன்னிப்பிட்டிய தெபானம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். இருவரும் அந்தரங்கமாக இருக்கையில், அந்த காட்சிகளை பொலிஸ் கான்ஸ்டபிள் தனது அலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கணவரின் அலைபேசியில் காணப்பட்ட வீடியோக்களை மனைவியிடம் காட்டி, அவற்றை இணையத்தில் வெளியிடாமல் இருக்கவேண்டுமெனில் 50 இலட்சம் ரூபாவை தனக்கு கப்பமாக தருமாறு மனைவி மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த பெண், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்துக்குச் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஓய்வு பெற்ற பெண் கான்ஸ்டபிளும், அவரது கணவரான கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIDEO

Related News