ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் நிலையை ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யாவுக்கு செல்லவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று ரஷ்யா பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொஸ்கோவில் நாளை (26) நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ சந்திப்பில், ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் இந்த குழு கலந்துரையாட உள்ளது. அன்றைய தினம் காலை ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சருடனும் மாலை ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சருடனும் இந்த குழு சந்திப்பு மேற்கொள்ளவுள்ளது.
இந்த சந்திப்பின்போது பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக காமினி வலேபொட மேலும் குறிப்பிட்டுள்ளார்