HomeWorldIndiaவிண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் பிடிக்கப்பட்ட ராமர் பாலம்

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் பிடிக்கப்பட்ட ராமர் பாலம்

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் பிடிக்கப்பட்ட ராமர் பாலத்தின் படிமம் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரம் தீவிலிருந்து இலங்கையின் மன்னார் தீவுக்கு இடையே அமைந்துள்ள இந்த பாலம் கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது.

இந்த பாலம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல்-2 செயற்கைக்கோளின் மூலம் படம்பிடிக்கப்பட்டு, அதன் படிமம் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது மற்றும் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. கூற்றுப்படி, இந்த பாலம் 15 ஆம் நூற்றாண்டு வரை பயணத்துக்கு உகந்ததாக இருந்துள்ளது, பின்னர் பல புயல்களால் படிப்படியாக சேதமடைந்துள்ளது.

புவியியல் ஆதாரங்கள் கூறுகையில், சுண்ணாம்புக் கற்கள் ஒருகாலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்துள்ளன. ராமர் பாலத்தில் உள்ள மண் அமைப்புகள் உலர்ந்த நிலையில் காணப்படுகின்றன, மேலும் கடலின் ஆழம் ஒன்று முதல் 10 மீட்டர் வரை மட்டுமே உள்ளது என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராமர் பாலத்தின் தொடக்கப் புள்ளியான அரிச்சல் முனைக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

VIDEO

Related News