பிரபாஸ் – நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகி வருகிற பிரமாண்ட திரைப்படம் “கல்கி 2898 AD” ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ட்ரைலர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், “கல்கி 2898 AD” படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரும், விமர்சகருமான உமைர் சந்து தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
“கல்கி 2898 AD ஸ்டைலில் அதிகமாகவும், உள்ளடக்கத்தில் குறைவாகவும் உள்ளது. இதன் பொழுதுபோக்கு மதிப்பு குறைவாக உள்ளது. மேலும் மிக குறுகிய கதையினால் நமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் இருவருக்கும் அதிர்ஷ்டம் இல்லை. இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு இழப்புகளை உருவாக்கும்” என அவர் கூறியுள்ளார். ஜூன் 27ஆம் தேதி மக்கள் இத்திரைப்படத்தை எப்படி வரவேற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.