நடிகர் விஜயின் அதிரடியான வாழ்த்து

104

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், போட்டியின்றி ஒருமனதாக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற மனமார்ந்த வாழ்த்துகள்”” என்று குறிப்பிட்டார்.

18-வது மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

மேலும், காங்கிரஸ் அங்கமாகியுள்ள இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்று, மக்களவையில் வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரான்ஸ் உள்நாட்டு யுத்த அபாயம்: ஜனாதிபதி மக்ரோனின் எச்சரிக்கை
Next articleமீண்டும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு: