கனடாவில் வசிக்கும் தமிழ் நபரின் காணி தொடர்பான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாயைச் சேர்ந்த இந்நபர், தனது காணிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உரிமையாக்கித் தந்த நிலையில், அந்த நபர் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி காணிகளை மோசடியாக தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
குறித்த காணியின் உரிமையாளர், இது தொடர்பாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விரைவில் நடவடிக்கை எடுத்து, இரண்டு பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (16) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணி மோசடிகள் தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமது சொத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.