HomeheadlineBreakingஉக்ரைனில் ரஷ்யாவுடன் இணைந்து வடகொரியா படைகள் நுழைவு: 10,000 வீரர்கள் தயார்

உக்ரைனில் ரஷ்யாவுடன் இணைந்து வடகொரியா படைகள் நுழைவு: 10,000 வீரர்கள் தயார்

தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்த தகவலின் அடிப்படையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிடுவதற்காக வட கொரியா தமது படைகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், சியோல் இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளது.

உளவுத்துறை தகவல்களின் படி, 10,000 வடகொரிய படையினர் உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்பப்படுகிறது. இந்த அறிவிப்பு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இதே பொருளில் கூறியதற்கு ஒருநாள் கழித்து வெளியாகியுள்ளது. இதனால், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சமூகம் இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 1,500 வடகொரிய துருப்புக்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு வந்துள்ளதுடன், மேலும் 10,000 பேர் விரைவில் வரவிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், உக்ரைனின் பொல்டாவா பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை ஒன்று மீட்கப்பட்டதால், வட கொரியா ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை வழங்கி வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் வலுப்பெற்றுள்ளன.

மொஸ்கோவும் பியோங்யாங்கும் அண்மைய மாதங்களில் தங்களின் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிறந்தநாளில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், புடினை தமது நெருங்கிய தோழர் என்று அழைத்ததும் சர்ச்சையாக மாறியுள்ளது.

VIDEO

Related News