இலங்கை தொடருந்து திணைக்களம், வடக்கு தொடருந்து பாதையில் சேவைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, யாழ்தேவி தொடருந்து அன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடருந்து பாதையில் நடைபெறும் திருத்தப் பணிகளின் காரணமாக, தற்போது கொழும்பு கோட்டை முதல் மஹவ வரை மட்டுமே தொடருந்து சேவை இயங்குகிறது. எனினும், மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான தொடருந்துப் பாதையை எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் திறக்கவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பழுதுகளை சரி செய்வதற்காக ஆறு மாதங்களுக்கு தொடருந்து குறைந்தபட்ச வேகத்தில் இயக்குமாறு பொது முகாமையாளர் அறிவுறுத்தினார். இதனால் 64 கிலோமீற்றர் தூரத்தை கடக்க, முன்னர் தேவைப்பட்ட ஒரு மணித்தியாலம் தற்போது இரண்டரை மணித்தியாலமாக நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.