HomeSri LankaJaffnaகம்போடியா அழகு போட்டியில் இலங்கை பெண்ணுக்கு மூன்றாவது இடம்

கம்போடியா அழகு போட்டியில் இலங்கை பெண்ணுக்கு மூன்றாவது இடம்

கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

APHCA Cambodia Hair, Make up & Beauty Olympics 2024 என்ற இந்த போட்டி வருடாவருடம் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது, அதன் படி இந்த ஆண்டு கம்போடியாவில் போட்டி நடைபெற்றது.

இதில், 19 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு போட்டியாளர்களில் ஒருவரான அனித்தா விநயகாந்தன் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

அனித்தாவின் இந்த வெற்றிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

VIDEO

Related News