HomeEconomyசீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கறி விலைகள் உயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கறி விலைகள் உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில், யாழ். திருநெல்வேலிச் சந்தையில் இன்று (21.10.2024) பாவற்காய், பயிற்றங்காய் ஆகியவற்றின் விலை கிலோ 350 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கத்தரிக்காய் கிலோ 200 ரூபாயாகவும், மரவள்ளிக்கிழங்கு கிலோ 300 ரூபாயாகவும், பச்சை மிளகாய் கிலோ 350 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை தொடர்ந்தால், மற்ற மரக்கறிகளின் விலைகளும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, வவுனியாவில் வெற்றிலை ஒன்றின் விலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. 4 ரூபாய் மதிப்பில் விற்கப்பட்ட சாதாரண பாக்கு 30 ரூபாயாகவும், நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாயாகவும், பெரிய பாக்கு 50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும் பழுக்காத பாக்குகளை இரசாயனம் தடவி, சந்தைக்கு விநியோகிப்பது போன்ற செயல்கள் நடந்துவருவதால், வவுனியாவில் மக்கள் மற்றும் வியாபாரிகள் யாழ்ப்பாண பாக்குகளை வாங்குவதை தவிர்க்கின்றனர்.

இந்த நிலை காரணமாக, 50 ரூபாயாக விற்பனையாகிய வெற்றிலை இப்போது 150 ரூபாயாகவும், சூப்பர் வெற்றிலை என அழைக்கப்படும் வெற்றிலை பாக்கு பொதி 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

VIDEO

Related News