ரஷ்யாவில் நேற்று (22.10.2024) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இந்த சந்திப்பு நட்புறவான உரையாடலுடன் நடைபெற்றது, இது வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை கண்டறிவது முக்கியம் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், ரஷ்யா-உக்ரைன் மோதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், அனைத்து மோதல்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பது தமது நிலைப்பாடு என குறிப்பிட்டார்.
அமைதியான தீர்வுகள் காணப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும், அதற்காக இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.