அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா செல்லும்போது தற்காலிகமாக தடைவிதிக்குமாறு அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க பிரஜைகள் எதாவது சந்தேகத்துக்கிடமான செயல்கள் அல்லது அவசர நிலைகள் இருப்பின், 119 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதேசமயம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பியாவில் ஏற்பட்ட யுத்தங்களின் பின்னணியில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகள் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
இத்துடன், எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பில் 1997 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.