HomeheadlineBreakingகப்பல் மூலம் வெளியேறும் பயணிகளுக்கு வரி குறைப்பு

கப்பல் மூலம் வெளியேறும் பயணிகளுக்கு வரி குறைப்பு

இலங்கை அரசாங்கம், கப்பல்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கும் வரியை குறைத்துள்ளதாக “IndSri Ferry Service Pvt” நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் படகு சேவையின் செயல்பாடுகளை விளக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்தியா நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவை தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் சீராக இயங்கி வருகிறது. 2023 அக்டோபர் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, சிறிய இடைவெளிக்குப் பிறகு 2024 ஆகஸ்ட் 16ஆம் தேதி மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பித்தது.

இந்திய மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இவ்வசதியை பயன்படுத்தும்போது, பயண சீட்டுகளை இணையத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும், இந்திய அரசு, நாகப்பட்டினம் துறைமுகத்தில் எதிர்நோக்கும் செலவுகளை ஈடுகட்ட, ஒரு ஆண்டுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்குகிறது.

இந்த சேவையின் மூலம், இந்தியா – இலங்கை இடையிலான இணைப்புகளை விரிவுபடுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கூடுதல் திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

VIDEO

Related News