HomeSri LankaJaffnaயாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் போதை மாத்திரைகளுடன் நடமாடுவதை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அவரை கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தற்போது அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

VIDEO

Related News