அறுகம்குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உள்ளதால், அங்கு தாக்குதல் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்தார்.
இஸ்ரேலியர்கள் அறுகம்குடாவை மிகவும் விரும்புகின்றனர், அங்கு நீச்சல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சிலர் அங்கு ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகிறது.
பொலிஸார் ஆரம்பத்திலேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, வீதியில் தடைகள் அமைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனையிடுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸ், விசேட அதிரடிப்படை, கடற்படை, இராணுவம் மற்றும் புலனாய்வு திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.