நம்பத்தகுந்த தாக்குதலுக்கான தகவல்கள் கிடைத்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
பொலிஸ் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எந்தவொரு அவசரநிலை அல்லது தகவல்களை ‘1997’ என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.