அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று (23.10.2024) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அவர் வடமாகாணத்தின் புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தை சந்தித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தூதுவர் ஜூலி சங், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், இந்த சந்திப்பின் போது, பிராந்தியத்துக்கான ஆளுநரின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதோடு, பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மற்றும் விவசாய வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது போன்ற அமெரிக்க-இலங்கை ஒத்துழைப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார்.