பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த தொடருக்குப் பின்னர், ஐசிசி (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 30 போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து 3-ஆம் இடத்தில், தென்னாப்பிரிக்கா 4-ஆம் இடத்தில், இலங்கை 5-ஆம் இடத்தில், மற்றும் நியூசிலாந்து 6-ஆம் இடத்தில் உள்ளன.