ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனிய மாணவர்களுக்கு தற்போது இணையத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காசாவின் கல்வி அமைச்சு இந்த தகவலை அறிவித்துள்ளது.
காசா பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிறிய கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு, கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
200,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது இணையத்தின் மூலம் கல்வி கற்கின்றனர்.
மேலும், சமீபத்தில் இஸ்ரேலுக்குள் 25க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ஊடுருவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.