மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (23) நடைபெற்றது. மோசமான வானிலை காரணமாக ஆட்டம் தாமதமானது, பின்னர் போட்டி 44 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 36 ஓவர்களில் 189 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
மேற்கிந்திய வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களின் அழுத்தத்தால் அதிக நேரம் களத்தில் நிலைக்க முடியவில்லை. பிராப்டன் கிங், ஷர்பான் ரூதர்ஃபோர்ட், குடாகேஷ் மோடி ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினர்.
பின்னர் 189 ஓட்டங்களை நோக்கி விளையாடிய இலங்கை அணி, 38.2 ஓவர்களில் 190 ஓட்டங்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்கா 62 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற உள்ளது.