2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு உதவிக்கருத்தரங்கு யாழ் பல்கலையில் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கு ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
இது, 2024 ஆம் ஆண்டின் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் விஞ்ஞான மாணவர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் முன்னணி பாடசாலைகளின் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைக் கட்டங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். வெளி மாவட்டங்களில் இருந்து பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவுகள் வழங்கப்படும்.
பங்கேற்புக்கு முன்பதிவு கட்டாயமாகும், இதற்காக QR Code ஐ Scan செய்வதன் மூலமாகவோ அல்லது வழங்கப்பட்ட மின்னியல் இணைப்பின் மூலம் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.