டானா புயல் உருவாகி தீவிரமடைய உள்ளதால் கொல்கத்தா விமான நிலையம் மற்றும் தொடருந்து சேவைகள் மூடப்படுகின்றன

5

வடக்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்த மண்டலம் டானா புயலாக உருவெடுத்துள்ளது.

டானா புயல் நாளை (24) அதிகாலையில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக, கொல்கத்தா விமான நிலையம் நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படும். மேலும், கொல்கத்தா கடலோர வழித்தடத்தில் இயங்கும் 197 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Previous articleநுரைச்சோலை மின் நிலையம் மீது வீழ்ந்த ட்ரோன்
Next articleஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50ஆவது பட்டமளிப்பு விழா இந்த மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது