இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று (24) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்கத் தூதரகத்தால் யூ.எஸ். எயிட் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் கீழ் “அகம்” உளவளத்துணை நிலையத்துக்கு தூதுவர் ஜுலி சங் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்தனர்.
இந்தக் கூட்டத்தில், அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், யூ.எஸ். எயிட் அமைப்பின் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்கத் திட்டத்தின் தலைமை அதிகாரி ஜெயதேவன் கார்த்திகேயன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், அமெரிக்க தூதுவர் ஜுலி சங், “அகம்” உளவளத்துணை நிலையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்தார். பின்னர், துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் தற்கால நிலைமைகள் குறித்து விவாதித்தார்.