இலங்கையில் ஒரு முட்டையின் சில்லறை விலையை 41 ரூபாவுக்கும் குறைவாகக் கொண்டுவர முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இன்றைய தினம் (24) வர்த்தக அமைச்சில்நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது, முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலின் போது, 41 ரூபாவிற்கு குறைவாகவே ஒரு முட்டையை சந்தையில் விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதுதொடர்பாக கூறுகையில், தற்போது சந்தையில் ஒரு முட்டையை சில்லறை விலையில் 45 ரூபாவிற்கு குறைவாக வாங்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டில் நாளொன்றுக்கு தேவையான முட்டை உற்பத்தி 85,000ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பண்ணைகளில் இருந்து மொத்த விலையில் ஒரு முட்டை 35 அல்லது 36 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த இணக்கத்தின் மூலம், நாடு முழுவதும் முட்டையின் விலை குறைய வாய்ப்புள்ளது என்பதால், நுகர்வோருக்கு இது நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.