Homeheadlineயாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (24) அரசு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, தெரிவத்தாட்சி அலுவலர் கருத்து வெளியிடுகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் அதிகமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு முறைமை குறித்த விழிப்புணர்வு திட்டத்தை பிரதேச ரீதியாக மக்களுக்கு அறியச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வை பிரதேச செயலகங்களில் செயல்படும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல, பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டார்.

மேலும், தேர்தலுக்கு குறித்த முறைப்பாட்டுப் பிரிவுகளை பிரதேச செயலகங்களில் நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதில், உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ் மற்றும் அனைத்து பிரதேச செயலாளர்களும்கலந்துகொண்டனர்.

VIDEO

Related News