Homeheadlineஈரான் பதிலடி செய்யக்கூடாது என அமெரிக்கா, பிரிட்டன் வேண்டுகோள்:

ஈரான் பதிலடி செய்யக்கூடாது என அமெரிக்கா, பிரிட்டன் வேண்டுகோள்:

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி செய்ய ஈரான் முயற்சிக்க கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர், ஈரான் மீண்டும் பதிலடி மேற்கொண்டால், அதற்கான மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இது இடம்பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதல் இத்துடன் முடிவடைய வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. மேலும், லெபனான் மற்றும் காசா பகுதிகளில் நிலவும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தலைமை தாங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிரிட்டிஷ் பிரதமரும் ஈரான் பதிலடி செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். பிராந்தியத்தில் நிலைமை மேலும் தீவிரமடைவதை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு, இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி செய்ய உரிமை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

VIDEO

Related News