இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈராக் தமது வான்பரப்பை மறுஅறிவித்தல் வரை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால், விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஈராக் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், இஸ்ரேலும் ஈரானும் தங்களது வான்பரப்புகளை மூடியிருந்தன. இப்போது ஈராக்கும் இதே முடிவை எடுத்துள்ளது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலை இது தெளிவுபடுத்துகிறது.