இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, முதலில் துடுப்பெடுத்தாடி, 259 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்தின் கான்வே 76 ஓட்டங்களைச் சேர்த்தார். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
அதன் பின்னர், இந்திய அணி துடுப்பெடுத்தாடி,156 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 38 ஓட்டங்களைச் சேர்த்தார். நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
103 ஓட்டங்கள் முன்னிலையுடன், நியூசிலாந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கி, 5 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்களுடன் இரண்டாவது நாள் முடிவடைத்தது. பிளென்டெல் 30 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தற்போது, நியூசிலாந்து 301 ஓட்டங்கள் முன்னிலையில் வலுவான நிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ஓட்டங்களைப் பெற்ற ஜெய்ஸ்வால், இந்த வருடத்தில் மட்டும் 1,006 ஓட்டங்களை பதிவு செய்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1,000 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அடைந்துள்ளார். இதுவரை 23 வயதுக்குள் இந்த சாதனையை செய்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 5ஆவது வீரர் என்ற பெருமையை உடையவர் ஜெய்ஸ்வால்; இதற்கு முன்பு கார்பீல்ட் சோபர்ஸ், கிரேம் சுமித், டி வில்லியர்ஸ், மற்றும் அலெஸ்டர் குக் ஆகியோர் இதே சாதனையை நிகழ்த்தியவர்கள்.