இஸ்ரேல் இன்று மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு ஈரான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஈரானின் இராணுவ இலக்குகளை துல்லியமாகத் தாக்கியுள்ளது.
பல மாதங்களாக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய அதிகாரிகள், இந்த தாக்குதலில் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காக்கவில்லை என உறுதிபடுத்தியுள்ளதுடன், இந்த தாக்குதல் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றதாகவும், வான் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.