மெக்டொனால்ட்ஸ் மற்றும் அதன் இலங்கை கிளைகளுக்கான உரிமையாளராக இருந்த International Restaurant Systems நிறுவனம், தங்களது வணிக உறவை முடித்துக்கொண்டதாக அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், இலங்கையில் மெக்டொனால்ட்ஸ் தனது கிளைகளின் வணிகத்தை முடித்து கொள்வதோடு தங்களுக்கு ஆதரவு அளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், அண்மைக்காலத்தில் மெக்டொனால்ட்ஸ் தொடர்பான வதந்திகள் அல்லது ஊகங்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தியுள்ளன.
இந்நிறுவனம், கிளைகளை மூடுவதற்கான காரணங்களை அல்லது இலங்கையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடர்வார்களா என்பதைக் குறித்தும் எதுவும் விவரிக்கவில்லை.