விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்ததின்படி, நெல் களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை குறித்து இன்றும் நாளையும் விசேட ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வை நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை இணைந்து மேற்கொள்கின்றன.
அரிசி கட்டுப்பாட்டு விலைக்கு கிடைக்காததால் நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் **ஜனாதிபதி மற்றும் அரிசி வர்த்தகர்களுக்கு இடையேயான சந்திப்பில், கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை வழங்க வர்த்தகர்கள் சம்மதித்திருந்தனர்.
அரிசி விலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக,ஜனாதிபதி தலைமையில் நேற்றைய தினமும் மீண்டும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாய, வர்த்தக அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகள் மற்றும் சிறிய அளவிலான அரிசி விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கருத்துரைத்து, கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்வதை அனுமதிக்கப் போவதில்லை என வலியுறுத்தினார்.