ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் வளர்ந்து வரும் அணிகளுக்கான 20க்கு 20 தொடரில், இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஓமான் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில், பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இறுதிப்போட்டி நாளை (27.10.2024) நடைபெறவுள்ளது. இதில், இலங்கை ஏ அணி மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நேற்றைய அரையிறுதியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் பெற்றது. இலங்கை ஏ அணி 136 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டது. 17வது ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றியெட்டி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதியில், ஆப்கானிஸ்தான் ஏ அணியுடன் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணி மாபெரும் வெற்றியை நோக்கி போராட உள்ளது.