2024 செப்டம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு
மத்திய வங்கியின் அறிக்கை:
இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 2023 செப்டம்பரில் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்த நிலையில், 2024 செப்டம்பரில் இது 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
மொத்த வெளிநாட்டு வருமானம்:
2024 ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய மொத்தப் பணம் 4,843.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக உயர்ந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% அதிகரிப்பு என பதிவாகியுள்ளது.
இத்தகைய உயர்வு நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமைகின்றது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.