டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணங்களில் 6% மிதமான குறைப்பு விரைவில்
குறிப்பு:
சர்வதேச விலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, மின்சார கட்டணத்தை 4% முதல் 11% வரை குறைக்கும் முன்மொழிவு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் (PUCSL) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் கூறியதன்படி, அனைத்து துறைகளுக்கும் 6% மிதமான குறைப்பு ஏற்படுத்தப்படும்.
மின்சார சபைக்கு அனுப்பி, அதற்கான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பொது கலந்தாய்வுக்கு அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க புதிய மின்சார கட்டண முறைகளை அறிமுகப்படுத்துவதே அடுத்த கட்ட முயற்சி என்பதால், விலைச் சூத்திரம் மீளாய்வு செய்யப்படுகின்றது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.