கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை 2,447 இலங்கையர்கள் விவசாயத் தொழில்துறையில் பணியாற்ற இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் விவசாயத்துறைக்காக 61 இலங்கையர்கள் விரைவில் அனுப்பப்படவுள்ளனர். அவர்களுக்கான பயணச் சீட்டு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.