பொருளாதார ஆலோசகர் உட்பட நிதி அமைச்சின் அதிகாரிகள், எதிர்காலத்தில் சிறந்த வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று(26) பிற்பகல் இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.