சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் விட்டமின்களை காலாவதியான பின்னர் மீண்டும் விற்பனை செய்த மோசடியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று (26) உகுஸ்ஸா பகுதியில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல சீன உணவு விற்பனை நிலையத்தில் சீன உணவுகள், மருந்துகள் மற்றும் விட்டமின்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சீன உணவுகளை விரும்பும் இலங்கையர்களும் சீனர்களும் இந்த இடத்திற்கு வருகை தருகிறார்கள். ஆனால், காலாவதியான பொருட்களின் லேபிள்களை மாற்றி மீண்டும் விற்பனை செய்வதாக தகவல்கள் வந்தன.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் “அத தெரண உகுஸ்ஸா” என்ற அமைப்புடன் சேர்ந்து அந்த இடத்திற்கு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட தேடுதலின் போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் லேபிள்கள் அடையாளம் காணப்பட்டன. சில பொருட்களின் காலாவதி திகதிகள் கூட அடையாளம் காணப்படவில்லை.
காலாவதியான மருந்துகள் மற்றும் விட்டமின்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைவும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர், மூன்று மாடிகளைக் கொண்ட அந்த கடைக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் முயற்சிகளில் அத தெரண உகுஸ்ஸா தீவிரமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.