HomeSri Lankaஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளம் 2025 ஜனவரி முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரான விஜித ஹேரத் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று (29) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துரையாற்றிய அவர், 2025 முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவும் ஜனவரி முதல் வழங்கப்படும் என குறிப்பிட்டார். இதற்கான இறுதி தீர்மானம் நிதி நிலைமையை ஆராய்ந்த பிறகே எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கான நிதியை முன்னதாகப் பரிந்துரை செய்த பின்னர், கடந்த அரசாங்கம் சம்பள அதிகரிப்பிற்கு எந்தவிதமான பணத்தையும் ஒதுக்காததை அமைச்சர் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி நிதியமைச்சராக இருந்தபோது சம்பள அதிகரிப்பு முன்மொழிவுகளை சமர்ப்பித்தார்; ஆனால் திறைசேரியில் போதுமான நிதி இருப்பதா என்ற கேள்வியை அவர் உறுதியாகக் கவனிக்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேபோன்று, இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவுக்கும் ஜனவரி மாதம் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டதாகவும், ஆனால் அதற்கான நிதி இல்லாத நிலையில் அது வழங்கப்படாமல் போய்விட்டது என்றும் தெரிவிக்கின்றார்.

அவரது உரையின் முடிவில், “நாம் நாட்டு மக்களை ஏமாற்ற மாட்டோம். 2025 முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை நிரந்தரமாக அதிகரிக்க உறுதிமொழி அளிக்கின்றோம். ஆனால் அது எவ்வளவு என கூறுவது கடினம்,” என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

VIDEO

Related News