வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில் போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (02.11.2024) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு, அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.