HomeCinemaகள்ளச்சாராய விஷப்புகுதியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

கள்ளச்சாராய விஷப்புகுதியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி புறப்பட்டுச் சென்றார்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் விஜய்யுடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் சென்றனர்.

நேற்று நடந்த விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பரிதாபகரமான நிலையை விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள், சிபிசிஐடி போலீசார் ஆகியோர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் மட்டுமின்றி, தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் கள்ளக்குறிச்சி சென்றனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர்களும் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதனால், கள்ளக்குறிச்சி நகரம் அரசியல் வாகனங்களால் நிரம்பியிருந்தது.

மாலை 6.30 மணியளவில் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்த விஜய், விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார்.

முன்னதாக, நடிகர் விஜய் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டு, தமிழக அரசை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும், நீட் விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIDEO

Related News