இலங்கையில் தற்போதைய தேங்காய் விலை உயர்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடரும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
சில பிரதேசங்களில், ஒரு தேங்காய் தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் தேங்காய்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் விசேட வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும், அது மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.