சீன அரசாங்கம், அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 30 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவி, சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து உத்தியோகப்பூர்வமாக கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவது, வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால முகாமைத்துவம் தொடர்பான திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கான நிலையான தீர்வுகள், அவ்வாறான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடிய திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.