அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானிய தொழில்கட்சியின் தலையீடு உள்ளது எனக் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு, பிரித்தானிய தொழில்கட்சியினர் ஆதரவளிக்கிறார்கள் என்பதால், அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், தொழிற்கட்சியுடனான ஜனநாயகக் கட்சியின் உறவுகளை சட்டவிரோத வெளிநாட்டு உதவியாகக் கருதுகிறார்.
அமெரிக்க சட்டத்தின் அடிப்படையில், வெளிநாட்டினர் அமெரிக்கத் தேர்தல்களில் பிரசாரம் செய்யலாம், ஆனால் அவர்களுக்குப் பணம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு முன்னதாகவும் உதவியுள்ளனர்.
தற்போது நடைபெறும் இந்த செயற்பாடு, எதிர்காலத்தில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே தலையீட்டை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.