நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது பறந்துகொண்டிருந்த ஒரு ட்ரோன் கமரா மின் நிலைய வளாகத்தில் வீழ்ந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (23) பிற்பகல் நடந்ததாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ட்ரோன் மூலம் மின் உற்பத்தி நிலையப் பகுதியின் படங்களை எடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், சட்ட அனுமதியின்றி ஆலைக்கு மேலாக ட்ரோன் பறக்க விடுவது சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக விமானப்படை மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ட்ரோன் கமரா பறக்க விடப்பட்ட காரணத்தை கண்டறிய சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.