ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த அறிக்கைகள் இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவை, ராஜகிரிய தேர்தல் செயலகம் மற்றும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.
மேலும், இந்த செலவு அறிக்கைகளில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது முறைகேடுகள் காணப்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.