உகாண்டாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உகாண்டாவின் தலைநகர் கம்பாலா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எரிபொருள் தாங்கியை ஏற்றிச் சென்ற பாரவூர்தி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் எரிபொருளை சேகரிக்க கூடியிருந்தனர்.
அதிவேகமாக, பாரவூர்தி தீப்பற்றி வெடித்துச் சிதறியது, இதனால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்துக்கு உடனடியாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.